காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவன் செய்த கொடூர கொலை!

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் Meghashree என்பவர் பெங்களூருவின் Bommanahalli-வில் Begur பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு தனது நண்பர்களான உஷா மற்றும் ரம்யாவின் உறவினரின் மகனாக இருந்த சுவாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

Advertisement

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து Meghashree ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுவாமி தபாவில் வேலை செய்து வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு Rajarajeshwarinagar-ல் இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் இவர்கள் பெங்களூருவின் Byadarahalli பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் பொருளாதார நெருக்கடி காரண்மாக இருவருமே வாழ்க்கை நடத்துவது சிரமாமாக இருந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும், மைசூருவில் உள்ள கலாஸ்தவாடிக்கு மாறியுள்ளனர். ஆனால், அங்கு இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி காவல்நிலையத்திற்கு சென்றனர். இதைத் தொடர்ந்து Meghashree தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி சுவாமி மனைவியை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அப்போது அவர், கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் ஒன்றாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வோம் என்று கூறி, அவரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளார்.

அங்கு ஒரு நாள் இரவு முழுவதும் ஒன்றாக தங்கியுள்ளனர். அதன் பின் மார்ச் 23-ஆம் திகதி மாலை இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி, நாம் திருப்பலபுராவுக்குச் செல்வோம் என்று அழைத்துள்ளார். அப்போது இருவரும் போகும் வழியில் சுவாமி பனகட்டா கேட் அருகே சென்ற போது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அங்கிருக்கும் கால்வாயில் வீசிவிட்டு தப்பியுள்ளார்

இதற்கிடையில், Meghashree தாயார் தன்னுட மகளை தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை, இந்த சமயத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுவாமியின் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க, அதில் இருக்கும் முகவரியை வைத்து, அவர் கடந்த மாதம் 14-ஆம் திகதி திருமலபுராவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு, அவரிடம் அவர் தனது மகளைப் பற்றி கிராமவாசிகளிடம் விசாரித்தபோது, தன்னுடைய மகள் இங்கு இல்லை என்பது தெரியவர, அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்டதாகவும், குறித்த கிராமத்தில் வசிக்கும் சிலர் தன்னிடம் கூறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த ஒரு சில சமூக அமைப்புகளும், இது ஒரு கெளவுர கொலை என்பது போல், சுவாமியை உடனடியாக கைது செய்யப்படும் போராட்டங்கள் நடத்தினர்.

தற்போது இறுதியாக சுவாமியை பொலிசார் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் காவலில் வைத்துள்ளனர்.

இருப்பினும் தற்போது வரை மனைவியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை, பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.