வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் கனடியர்கள் மீள அழைக்கப்படமாட்டார்கள்; கனடிய வெளியுறவு அமைச்சர் பகீர்

வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் கனடியர்களை மீண்டும் கனடாவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கனடா மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பிட்டுள்ளது

கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne நேற்றையதினம் நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் முன்னதாக இந்தக் கருத்தை வெளியிட்டார்.

COVID தொற்று நோய் உலகெங்கிலும் தொடர்ந்து பரவும் நிலையில் மத்திய அரசு இனி பயணிக்கும் கனடியர்களை திருப்பி அழைக்காது என வெளியுறவு அமைச்சர் கூறினார்.

Advertisement

தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தின் “பயண ஆலோசனை மிகவும் தெளிவாக உள்ளது” எனவும் அமைச்சர் Champagne கூறினார்.

அத்துடன் இந்த ஆண்டு பயணம் செய்வது “பொருத்தமானது” எனத் தான் நினைக்கவில்லை எனவும் Champagne கூறினார்.

மேலும் உலகெங்கிலும் உள்ள COVID நிலைமையைப் பார்க்கும்போது வீட்டில் இருப்பதே செய்ய வேண்டிய சரியான நடவடிக்கை எனவும் அமைச்சர் Champagne தெரிவித்தார்.