இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்றலையை வெல்ல தங்களுக்கு உதவுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரைடோ காட்டேஜுக்கு வெளியே இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டின் தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஒரு குளிர்காலத்தை எதிர்கொள்கிறோம்.
Advertisement
இது மக்களை மேலும் மேலும் உள்ளே செல்லச் செய்கிறது. மேலும் தொற்றுபாதிப்புகள் அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி, மேலும் அன்பானவர்கள் இறந்து போவதைக் காணும் அபாயத்தில் இருக்கிறோம்.
அதை மனதில் கொண்டு, சாதாரண விழாக்களை நடத்துவது என்பது விவாதத்திற்கு வெளியே இருக்கும். மக்கள் சோர்வடைந்து வருகின்றனர்.
இனி தங்கள் அன்றாட வாழ்க்கையில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள விரும்பவில்லை’ என கூறினார்.