யாழ்ப்பாணத்திலும் திடீரென மரணமாகும் இளம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றதாக கூறப்படுகின்றது.
அதன்படி கடந்த 22 ஆம் திகதி கோண்டாவில் மற்றும் காரைநரைச் சேர்ந்த இரு இளம் குடும்பஸ்தர்கள் மயங்கி வீழ்ந்து மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அவர்களின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக வைத்தியசாலை வட்டாரங்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
Advertisement
இதே வேளை சாவகச்சேரியில் கொரோனா நபருடன் பழகி திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.