யாழ் சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

விவசாய நடவடிக்கைக்காக காணியை துப்பரவு செய்யும்போது, குண்டுகள் வெளிப்பட்டதை அடுத்து அது தொடர்பில் மக்களால் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

கடற்படையினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் இரு குண்டுகளையும் மீட்டுள்ளனர்.

Advertisement

குறித்த காணி உள்ளிட்ட பகுதியில் கடந்த காலங்களில் கடற்படையினரின் முகாம் அமைந்திருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மக்களிடம் அப்பகுதி கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து அப்பகுதியினர் விவசாய நடவடிக்கை மற்றும் கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக அப்பகுதியினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையிலையே அப்பகுதியில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன