நியூசிலாந்துடனான தொடரிலிருந்து பஹர் சமான் விலகல்

நியூஸிலாந்துக்கெதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பஹர் சமான் விலகியுள்ளார்.

அவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து தொடருக்கு செல்லும் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வீரர்கள் விருந்தகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு அவர்களது உடற் தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் இதன்போது, பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பஹர் சமான்க்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோனைகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய வீரர்களை கருத்திற்கொண்டு அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் நியூஸிலாந்துக்கெதிராக பாகிஸ்தான் அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் 3 இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.