நான்கரை மாதங்களில் 22 முறை பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டேன் : கங்குலி

முழு உலகையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.

இத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு பி.சி.சி.ஐ. தலைவரும், முன்னாள் அணித் தலைவருமான கங்குலி, ஐ.பி.எல். தொடரை கடும் போராட்டத்துக்கு பிறகு நடத்தி முடித்தாரென்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில், ஒரு நேர்காணலில் அவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

அதாவது, கடந்த 4½ மாதத்தில் நான் 22 முறை பி.சி.ஆர்.பரிசோதனை செய்துள்ளேன். எனவும், இதில் ஒரு முறைகூட எனக்கு பாதிப்பு இருப்பதற்கான முடிவு வரவில்லையெனவும், என்னை சுற்றி வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் தான் நான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். போட்டி தொடரை வெற்றிகரமாக பி.சி.சி.ஐ. குழு நடத்தியது பெருமையாக உள்ளது .14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நிச்சயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஐக்கிய அரபு எமிரேட்சில் நாங்கள் 400 பேர் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். எல்லோரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக 2½ மாத காலத்தில் 30 முதல் 40 ஆயிரம் பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் தனிமைப்படுத்துதல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அனைத்து வீரர்களும் உடல்தகுதியுடன் இருக்கிறார்கள் என்றார்.