சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவி (GAVI) உடன் ஏற்கனவே இணைந்துள்ள இலங்கை,கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க உள்ள ‘கோவக்ஸ்’ அமைப்புடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பவித்ரா வன்னியராச்சி, இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீமானவர்களுக்கு ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசியை கிடைக்கச் செய்வதே அரசாங்கத்தின் முயற்சி என தெரிவித்துள்ளார்.
Advertisement
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெற்றவுடன் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றார்.