கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ,இலங்கையில் நேற்றைய தினம் 458 கொரோனா நோயாளிகள் பதிவாகினர். அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 259 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் ,இந்த நிலையில், அவர்களில் கொம்பனித் தெருவைச் சேர்ந்த 90 பேர் அடங்குவதாகவும் குறித்த செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது