யாழ்.நாவற்குழி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பின்புறமாக வந்த பேருந்து மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின் புறத்தால் மோதியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான நாவற்குழி பகுதியைச் சேர்ந்த ஜீவரத்தினம் வயது 40 என்பவரே காயங்களுக்கு உள்ளாகிய அறியக்கிடைத்தது.
Advertisement
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.