மட்டக்களப்பில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிளைமோர் மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை முல்லை நகர் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கிளைமோர் ரக வெடிப்பொருள் ஒன்றினை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த வீதியில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் வெடிப்பொருள் என கருதி அதனை மீட்கும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிசார் ஈடுபட்டனர்.

அந்த வீதியின் அருகாமையில் உள்ள வெற்றுக்காணியில் கடந்த யுத்த காலத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதேவேளை கிளைமோர் மீட்கப்பட்ட காணியினுள் தற்போது கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.