மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏறாவூர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் தண்டவாளத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது ரயில் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) பகல் வேலைக்கு நடந்து சென்ற போதே இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் 3 ஆம் பிரிவு, மகளீர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஜமால்டீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

குறித்த ரயில் சம்பவதினமான இன்று பகல் 11.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ரயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர் வாய்பேசமுடியாதவர் எனவும் சடலம் பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.