மட்டக்களப்பு எல்லையில் ஆறு பேர் கடத்தல்? அடித்தும் சித்திரவதை? உண்மை என்ன?

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் 6 பண்ணையாளர்களை இன்று காலை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

 பின்னர் அவளுடைய அனைத்து தொலைபேசியையும் பறித்து   வைத்தவுடன் அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து அவர்கனை இனம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுவிட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 தற்பொழுது குறித்த இடத்திலிருந்து இனம் தெரியாத இடத்திற்கு 6 கடத்திச்  சென்றுள்ளதாக அங்கிருந்த பண்ணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

 இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

 கடத்தப்பட்ட 6 பண்ணையாளர்களையும் தேடிச் சென்ற சக  பண்ணையாளர்களையும் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தி துரத்தியதாகவும் அதனால் பண்ணையளர்கள் அச்சத்தில்  திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

 இதேவேளை நேற்றிரவு(8) இனம் தெரியாதவர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து  பண்ணையாளர்களை அச்சுறுத்தியதாகவும் பண்ணையாளர்களின் குடியிருப்புக்களை சோதனை செய்து ஆயுதங்கள் வைத்து இருக்கிறீர்களா என கேட்டு அச்சுறுத்தியதாக அவ்விடத்தில் இருந்த பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

சின்னத்தம்பி பாஸ்கரன், 

முத்துப்பிள்ளை சேந்தன், 

சுப்பிரமணியம் கோணேசன்,

 பரசுராமன் மேகுலன், 

கிருபைராசா ருச்சுதன்,

சண்முகம் டயன்சன்

ஆகிய ஆறுபேரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு போடப்பட்டுள்ளது