சிங்கள பேரினவாத அரசை கண்டித்து பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக எதிர்வரும் திங்கள் கிழமை காலை 9 மணிமுதல் 11 மணிவரை கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்படுள்ளது.தாயகத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தோழமையை வழங்கும் வகையில் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் உரிமையுடன் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

Previous articleமுஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனா!
Next articleயாழ் மாணவர்களின் போராட்டத்தில் இணைந்த இந்துக் கல்லூரி மாணவன்!