காலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் நிரைப்படம் பார்க்க யாழ்.நகரில் தற்போது நள்ளிரவே இளைஞர்கள் பட்டாளம் திரள தொடங்கிவிட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
Advertisement
அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்பை தூண்டியது.
இந்நிலையில் இன்று (13) மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க நள்ளிரவே இளைஞர்கள் யாழ்.நகரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.