இலங்கையில் 50 ஆயிரத்தை எட்டவுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 49ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 43 ஆயிரத்து 267 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் இன்னும், ஆறாயிரத்து 335 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Advertisement

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 244 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.