கனடாவில் மிகப்பெரும் கௌவரத்தை பெற்ற தமிழர்!

தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் கனடா யோகா மினிஸ்ட்ரியின் அதிகாரபூர்வ நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

YMC (யோகா மினிஸ்ட்ரி அப் கனடா) – அமைப்பின் வாயிலாக கனடாவில் யோகா கல்வி, யோகா வணிகம், யோகா சாதனைகளின் அங்கீகாரம் மற்றும் யோகா ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கனடாவின் YMC -அமைப்பு, ஐ.என்.சி.யின் கீழ் கனடாவின் சமூகத்தில், யோகாவின் அதிக வளர்ச்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.

Advertisement

சி.ஆர்.ஏ-கனடா (கனடா அரசு) நிறுவனத்தின் நிறுவன பதிவு ஒப்புதல் பெற்று இயங்குகிறது.மேலும் இவ்வமைப்பின் வாயிலாக யோகா துறையில் ஆர்வமுள்ளவைகளை இணைப்பது மற்றும் எளிய வகையில் அனைவர்க்கும் யோகப்பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக மற்றும் அதிகாரபூர்வ நடுவராக யோகா கலையில் மிக அனுபவம் வாய்ந்த, தற்போது மலேசியாவில் வசிக்கும், தமிழ்நாடு விருதுநகரை சார்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.