முல்லைத்தீவில் பல கோடி ரூபா கஜமுத்தை விழுங்கியவர் கைது!

பல கோடி ரூபாய் மதிப்பு உடைய ‘கஜமுத்து’ எனப்படும் யானை தந்தத்திலிருந்து கிடைக்கும்
முத்தை வழங்கிய நிலையில் ஒருவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கஜமுத்துக்களை கடத்த முயன்ற இருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட
நிலையில் ஒருவர் முத்து ஒன்றை விழுங்கிய நிலையிலேயே வைத்தியசாலையில் இன்று
வெள்ளிக்கிழமை மாலை சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறப்பு அதிரடிப் படையில்
முன்னர் பணியாற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தேக நபர் கதிரிவீச்சு பரிசோதனைக்கு
உள்படுத்திய போது வயிற்றுப் பகுதியில் முத்துக் காணப்படுவதாக சட்ட மருத்துவ வல்லுநர்
க.வாசுதேவ அறிக்கையிட்டுள்ளார்.

அதனால் சந்தேக நபரின் வயிற்றில் காணப்படும் முத்து மலம் மூலம் வெளியேறலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.