அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்பு!

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மீரிகம பகுதியில் நேற்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் திருமணத்தின் பின்னரான வீட்டிற்கு வரும் விழாவிற்கு ஆடை அணிந்திருந்த இரண்டு மணப்பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஏர் கண்டிஷனர் மூலம் வெளியேறிய நச்சு வாயுவை அவர்கள் சுவாசித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏர் கண்டிஷனருக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஜெனரேட்டர் கட்டிடத்திற்குள் நச்சு வாயு பரவுவதற்கு காரணமாக இருக்கலாம், இதன் விளைவாக அவர்கள் மயக்கமடைந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.