மெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 இளைஞர்கள் மற்றும் 13 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், போதை விருந்து நடத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் எச்சரிக்கையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
எப்படியிருப்பினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிற்காக அவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதை பொருளுடன் இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.