கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்மலான பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.