கமல், ரஜினி பட மூத்த நடிகர் மரணமடைந்தார்!

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் நகைச்சுவை கலந்து கமெர்ஷியல் படமாக வெளியான பம்மல் கே. சம்மந்தம் திரைப்படத்தில் நடித்திருந்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி.

இதுமட்டுமின்றி பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்திழும் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் திரையுலகில் மூத்த நடிகராக விளங்கி வந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி இன்று வயது மூப்பு காரணமாக தனது 98 வயதில் மரணமடைந்துள்ளார்.

Advertisement

இந்த தகவல் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.