யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் இருந்ததாக கூறி ஆய்வில் இறங்கிய தொல்லியல் ஆய்வாளர்கள்!

யாழ்.புத்துார் – நிலாவரை கிணற்றின் அருகில் தொல்பொருள் திணைக்களத்தினால் திடீரென இன்று காலை அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

Advertisement

இதன்போது இங்கு புராதனக் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுவதனால் அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.