எதிர்வரும் 9 வருடங்களில் அதிக வயதுடையோர் வசிக்கும் நாடாக இலங்கை மாறும்!

எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களின் சனத்தொகையை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய , ஒவ்வொரு 5 நபர்களுக்கும் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களில் பெருமளவானோர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வயது முதிர்ந்தவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம், ஹெல்ப் எஜ் ஸ்ரீலங்கா அமைப்புடன் இணைந்து, பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010 முதல் 2018 வரையான காலப்பகுதியில், வெள்ள அனர்த்தம் காரணமாக, 14 மில்லியன் பேர் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வரண்ட காலநிலை காரணமாக குறித்த காலப்பகுதியில் 12 மில்லியன் பேர் நாட்டில் பாதிக்கப்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது