யாழ் மீசாலையில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொண்டு சென்றவர், பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

மீசாலை தெற்கை சேர்ந்த யோ.குமார் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், நேற்றைய தினம் சரசாலை பகுதியில் தமது மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவேளை புற்புதருக்குள் இருந்த பாம்பொன்று அவரை தீண்டியுள்ளது.

Advertisement

அதனை அறியாத அவர், மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து வீட்டில் இருந்தோர் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கபட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.