இலங்கையில் கொரோனா சிகிச்சை மையத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா!

எம்பிலிபிட்டி யோதகம கொரோனா சிகிச்சை மையத்தில் சகோதர இன பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவருக்கே இவ்வாறு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த சிறுமியின் தாய், தாதி ஒருவருக்கு தகவல் தெரிவித்த நிலையில்

Advertisement

அந்த தாதி ஏனைய தாதிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்வை நடத்தியாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.