மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில்
உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த வாரியபொலயைச்சேர்ந்த 34 வயதுடைய ஹேரத் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு ரிதிதென்னையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement