இலங்கையில் கேள்விக்குறியாகியுள்ள பாதுகாப்பு? பட்டப்பகலில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்!

பட்டப்பகலில் வந்து துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு இலங்கை நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று(25) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எகடஉயன பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்டோவில் பயணித்த இருவரில் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.