மன்னாரில் ஆசிரியர் ஒருவரின் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

மன்னாரில் ஆசிரியர் ஒருவரின் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவள்தினமும் பாடசாலைக்குச் செருப்போடுதான் வருவாள்.ஏன் என்று கேட்டால் சொக்ஸ் வாங்கோனும் என்று சொல்லுவாள்.

அதிபரின் கண்ணில் அவள் அன்று பட்டிருக்கிறாள்.அதிபர் அவளையழைத்து ஏன் சப்பாத்து அணியவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவள் “வாங்கித்தர யாருமில்லை என்று அழுதிருக்கிறாள்.

பிறகென்ன என்ன நாம் அவ்வழியே போனோம்.கண்டோம்.உடனடியாக புதிதாய் வாங்கிவந்தோம். வழங்கினோம்.அதெல்லாம் ஒரு பெரியவிடயமில்லை.அந்த இடத்தில் நடந்த அந்தச்சம்பவம் தான் மனதை உருக்கியது.

அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தரையில் குந்தியிருந்து அந்தப்பிள்ளைகளின் சப்பாத்துகளை மாட்டிக்கொள்ள உதவினார். இன்று எத்தனை பிள்ளைகள் தகப்பனால் கூட கவனிக்கப்படாமல் இருக்கின்றனர்.

ஒரு ஆசானின் தகப்பன் ஸ்தானத்து பணிவிடையை அன்று மன்னார் புனித சவேரியார் பெண்கள் பாடசாலையில் கண்டேன்.

அவருக்கு இன்று பதிவுத்திருமணம் அவர் நிறைவான வாழ்வைப்பெற வாழ்த்துகின்றேன் என முகநூல்வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Previous articleகொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி தீர்மானித்துள்ள மின்சார சபை!
Next articleபிறந்தநாள் வாழ்த்துக்கள் – 15/2/2021