அடுக்குமாடி கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பரிதாபமா பலி!

வெள்ளவத்தை – ஹம்டன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடையவர் என சந்தேககிக்கப்படும் நிலையில், இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் அவர், குறித்த கட்டட கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளி அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் வெள்ளவத்தை பொலிஸாரும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.