யாழில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 17வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொண்டைமானாறு சிறு கடல் பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக ஊறணி வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுப்பிட்டியைச் சேர்ந்த நல்லைநாதன் பிரகாஸ் (வயது 17) என்ற இளைஞர் இன்று மாலை நீராடச் சென்ற வேளை காணாமல் போயிருந்தார்.

பல மணி நேரப் போராட்டத்தின் பின்னர் அவர் மீட்கப்பட்டு ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement