49 திமிங்கலங்கள் நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
அவற்றில் ஒன்பது திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டது.
இதேபோல், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 52 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
Advertisement
கரையொதுங்கியவை அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்கள் எனவும், உயிருடன் உள்ள திமிங்கலங்களைக் காப்பாற்ற 65 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பைலட் திமிங்கலங்கள் கடல்சார் டொல்பின்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் நடத்தை பெரிய திமிங்கலங்களுக்கு மிகவும் பொதுவானதாகக் கருதப்படுகிறது.