கொழும்பு சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றம்!

கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுகாதாரத்துறை சார்ந்த 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Advertisement

இந்த சந்தர்ப்பத்திலேயே அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.