கொழும்பிலிருந்து யாழ் வந்துகொண்டிருந்த பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

சடுதியாக வீதிக்குள் நுழைந்த உழவு இயந்திரத்திலிருந்து தப்புவதற்கு முயன்றபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படாதபோதும் வாகனம் முற்றாக சேதமாகியுள்ளது.