எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியுட்டுள்ள தகவல்!

அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வாய்வழி பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இறுதியாக நல்லாட்சி அரசாங்கம் எரிபொருள் விலையை 2019 செப்டம்பரில் அதிகரித்தது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதுவரை எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Advertisement

அத்துடன் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளபோதும் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்போது இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட திருகோணமலை எண்ணெய் தொட்டிகள் மீண்டும் கைப்பற்றப்படுமா என்று எம்.பி. ஹேஷா விதானகே அமைச்சர் உதய கம்பன்பிலவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் திருகோணமலையில் உள்ள அனைத்து 100 தொட்டிகளையும் 2013 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அந்த தொட்டிகளில் பெரும்பான்மையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமும் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மீதமுள்ள தொட்டிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் கட்டுப்படுத்துகிறதாகவும் அவர் கூறினார்.