சற்றுமுன் கொரோனா தொற்று உறுதியான மேலும் 222 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 732 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

தற்போது தொற்று உறுதியானோரில் 4 ஆயிரத்து 447 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 445 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.