யாழ் பருத்தித்துறையில் இன்று 13 பேருக்கு உறுதியானது!

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (23) கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் தொற்று உறுதியான ஆசிரியையுடன் நேரடியாக தொடர்புபட்ட 12 பேருக்கு தொற்று உள்ளமை இன்றைய பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மிருசுவிலில் தொற்று உறுதியான குடும்பத்துடன் தொடர்புடைய பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

இவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.