வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஓன்று திடீர் மரணம்!

மாத்தளை – வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டரை வயதுடைய குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண தடுமல் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக இந்த குழந்தை நேற்று இரவு 11.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்த குழந்தை மாத்தளை, வில்கமுவ, தேவகிரிய பிரதேசத்தை சேர்ந்தவராகும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.