யாழ் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட மாட்டோம்!

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடபோவதில்லை என இ.போ.ச தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்த நிலையத்தில் இ.போ.ச. பேருந்துகளை தரித்து சேவையில் ஈடுபடுவது தொடர்பில்

நேற்றைய தினம் 6 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

Advertisement

இதன்போது தாம் தற்போது சேவையில் ஈடுபடும் பிரதான பஸ் நிலையத்தை எப்போதும் மாற்றப்போவதில்லை எனவும் புதிய பஸ் நிலையத்தில் தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபடப்போவதில்லை எனவும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை இ.போ.ச. பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல மறுப்பதால் தனியார் பேருந்துகளும் அங்கு செல்லும் என்பது சந்தேகமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.