வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நிலையில் முல்லைத்தீவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்!

வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நிலையில் முல்லைத்தீவு நாயற்றுப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தொடர்பிலான மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குளத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் இன்று முல்லைத்தீவு நாயாறு பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு நீராடியிருக்கின்றனர்.

அதன் போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் போன நிலையில் காணாமல் போயிருந்தார்.

Advertisement

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக தெரியவந்துள்ளமை துயரத்தை அதிகரித்துள்ளது.