தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு நொச்சிமுனையில் இளம் குடும்ப பெண் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு,

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணைய் ஊற்றி, தீயிட்டு தற்கொலை செய்ய முயன்ற நிலையில் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இசை நடனக்கல்லூரி வீதி முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இனம் குடும்ப பெண்ணுக்கும் கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து,சம்பவதினமான இன்று பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த பெண் தனக்குத் தானே தன்மீது மண்ணெண்ணைய் உற்றி தீயிட்டதையடுத்து,

Advertisement

அவர் தீப்பற்றிய எரிந்ததையடுத்து படுகாயமடைந்துள்ளார்.இதனையடுத்து உடனடியாக அவரை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.