மதுபானம் அருந்த பணம் கொடுக்க மறுத்த பாட்டியை தீயிட்டு பொசுக்கிய பேரன் – இலங்கையில் சம்பவம்

பாட்டியை தீயிட்டு பொசுக்கிய பேரன், ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொட-கரவிகெட்டிய பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபானம் அருந்துவதற்காக பணம் கேட்டபோது அதனை பாட்டி வழங்க மறுத்ததால், வீட்டுக்குள் இருந்த பாட்டி மீது தீ மூட்டியதாக பேரன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சம்பவத்தில் 84 வயதுடைய பாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.