யாழில் இளைஞனை வீதியில் வழிமறித்து தாக்கிய இராணுவம்!

யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது..

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர், தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.