யாழில் கொரேனா சிகிச்சை நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய பெண் ஒருவர் மரணம்!

யாழில் கொரேனா சிகிச்சை நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பிய 75 வயதான குறித்த பெண்ளே இவ்வாறு திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,

Advertisement

பருத்துறை தும்பளை பகுதியில் நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இதனையடுத்து அவருடைய குடும்பத்தவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான நடன ஆசிரியையின் மாமியார் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்கையளிக்கப்பட்ட நிலையில் நேற்றய தினம் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் கண்காணிப்பிற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் திடீர் சுகயீனமடைந்திருப்பதாக உறவினர்கள் சுகாதார பரிசோதகருக்கு கூறியிருக்கின்றனர்.

இதனையடுத்து உடனடியாக 1990 அம்புலன்ஸ் மூலம் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை அவருக்கு இன்று மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் சிகிச்சை நிலையத்திலிருந்து திரும்பியவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். இந்நிலையில் குறித்த 2 வாரத்திற்குள் ஏற்பட்டிருக்கும் இறப்பு கொரோனா இறப்பாக கருதப்பட முடியும் என சுகாதார பிரிவினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பே மாகாண சுகாதார அமைச்சு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகின்றது.

எனினும் கொரோனா மரணமாக கருதப்பட்டு கொவிட் -19 விதிகளுக்கமைய இறுதி சடங்கிற்கான ஒழுங்குகளை சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.