நாட்டில் இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன.
´கொவெக்ஸ்´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 லட்சம்; எஸ்ட்ரா ஸெனெக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.
Advertisement
இந்நிலையில் கொவிட் வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.