யாழ்ப்பாணம் நல்லூரில் வட மாகாண விவசாய திணைக்கள ஊழியருக்கு கொரொனா!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பட்டதாரிப் பயிலுனராகப் பணியாற்றிவருகின்ற பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நுகர்தல் (மணத்தினை உணர முடியாமை) பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்து குறித்த ஊழியர் கடந்த புதன்கிழமை தொடக்கம் அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இந்நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை தெரியவந்ததை அடுத்து அவருடன் அலுவலகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

அலுவலகப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாக விவசாயத் திணைக்கள வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.