மூன்று கிலோ அரிசியில் ஒரு குடும்பம் இரண்டு வாரங்கள் உணவு சமைத்து உட்கொள்ள முடியும் – விசர்தனமாக பேசும் வர்த்தக அமைச்சர் பந்துல

மூன்று கிலோ அரிசியில் ஒரு குடும்பம் இரண்டு வாரங்கள் உணவு சமைத்து உட்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 25000 ரூபாவில் ஒரு குடும்பம் ஒரு மாத்திற்கு உணவு உட்கொண்டு வாழலாம் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியவர் இந்த பந்துல குணவர்த்தன என்பது நினைவில் இருக்கிறது.

இந்நிலையில், அரசாங்கம் 1000 ரூபாவிற்கு நிவாரண பொதி வழங்குவதாகவும் ஆனால் அந்த நிவாரண பொதியை குறைந்த விலையில் வேறு இடங்களில் சிலர் விற்பனை செய்வதாகவும் ஆனால் அரசாங்கத்தின் நிவாரண பொதியில் உள்ள பொருட்கள் மிகவும் தரமானவை எனவும் பந்துல தெரிவித்துள்ளார்.

Advertisement

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

1000 ரூபா நிவாரண பொதியில் இரண்டு வாரங்கள் உணவு உட்கொள்ள முடியும் என பந்துல அறிவித்துள்ள நிலையில் குறித்த குடும்பங்கள் மூன்று வேளையும் கஞ்சி குடிக்கிறது என அமைச்சர் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை.