யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்து பரிசோதனையில் இன்று 18 பேருக்கு தொற்று!

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (ஏப்-07) 316 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவ்வாறு 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்களில் இருந்து அருவிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் விபரங்கள் வருமாறு,

Advertisement

உடுவில் சுகாதார அதிகாரி பிரிவு – 09

நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு – 06

சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு – 02

சங்கானை சுகாதார அதிகாரி பிரிவு – 01

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளும், யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெற்) வர்த்தகர்களிடம் இருந்து செவ்வாய்க்கிழமை பெற்ற மாதிரிகளின் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.