கனடாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்து 893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதேவேளை கனடாவில் இதுவரை 23 ஆயிரத்து 141 பேர் கொரோனாவுக்கு பலியகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.