வவுனியா- திருநாவல்குளத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருநாவல்குளம் பகுதியாக சென்றவர்களை மறித்து, ஒரு குழு மதுபோதையில் தாக்கியுள்ளனர்.
குறித்த குழு தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளையில் அவ்வழியாக இளைஞரொருவர்தாயாரை ஏற்றிச் சென்றுள்ளார்.
Advertisement
இதன்போது, தாயார் மீது அக்குழுவினர் தாக்கியுள்ளனர். அந்த இளைஞன் தாயாரை பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டு, தனது தாயை ஏன் தாக்கினீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த, குறித்த குழு, இளைஞனையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.